முஸ்லீம் கலைக்கல்லூரி சார்பில் பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், களியக்காவிளை முதல் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் வரை நடைபெற்ற சைக்கிள் பேரணி…
![]()
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, திருவிதாங்கோடு, முஸ்லீம் கலைக்கல்லூரி சார்பில் பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், களியக்காவிளை முதல் கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் வரை நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவியர்களை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ரேவதி அவர்கள் வரவேற்று,
முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது
ஐனநாயக கடமையினை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார்கள்.உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.மைக்கேல் அந்தோணி பெர்ணாண்டோ உட்பட பலர் உள்ளார்கள்.
