புதுச்சேரியில் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டு 2006 மற்றும் 2011 தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்ற தனக்கு போட்டியிட கட்சி வாய்ப்பளிக்கவில்லை என கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டு வென்ற நெல்லித்தோப்பு தொகுதியில் இம்முறை காங்கிரஸ் கூட்டணியில் திமுக போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தரப்பில் மேற்கு மாநில செயலர் ஓம்சக்திசேகர் போட்டியிட மனுதாக்கல் செய்தார். அதேபோல் அக்கூட்டணியிலுள்ள பாஜக தரப்பில் ஜான்குமாரின் மகன் ரிச்சர்டும் மனுதாக்கல் செய்தார். இதில் இழுபறி நீடித்தது. தொகுதி பங்கீட்டில் நெல்லித்தோப்பு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் ஓம்சக்தி சேகருக்கு உருளையன்பேட்டை தொகுதி தரப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓம்சக்தி சேகர் புதுச்சேரியில் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டு 2006 மற்றும் 2011 தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்ற தனக்கு போட்டியிட கட்சி வாய்ப்பளிக்கவில்லை என கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார்.
இதன் பின்னணியில் சதிவேலைகள் நடந்துள்ளதாகவும், நான் தனித்து போட்டியிட்டால் கூட வெற்றி பெற முடியும் .ஆகவே நான் தனித்து போட்டியிட்டால் தன்னை கட்சியில் இருந்து அகற்றுவதற்காக சதித்திட்டம் தீட்டி எனக்கு தொகுதி மாறி போட்டியிட வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய ஓம்சக்தி சேகர்
சதிகார கும்பல் பலகோடி கைமாறி என்னை வீழ்த்த சதி செய்கிறார்கள். ஆனால் அதில் நான் வீழமாட்டேன் என்று ஓம்சக்தி சேகர் கண்ணீர் விட்டு அழுதார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படாமல் கட்சி அறிவித்த உருளையான்பேட்டை தொகுதியில் போட்டியிவேன். இந்த தொகுதி மக்கள் காசு கொடுப்பவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது. என ஓம்சக்தி சேகர் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.