தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் கரும்பு கட்டிய டிராக்டரில் வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைச்செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் கரும்பு கட்டிய டிராக்டரில் வந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைச்செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக பாலக்கோடு ஆற்றுப் பகுதியில் இருந்து ஊர்வலமாக காவல் நிலையம், ஸ்தூபி மைதானம், பேருந்து நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை தாரை தப்பட்டை முழங்க கரும்பு கட்டிய டிராக்டரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தங்களுடைய கட்சி தொண்டர்களுடன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துக்கொண்டு தேர்தல் அலுவலகத்தில் தங்களுடைய வேட்புமனுவை தேர்தல் அலுவலர் சாந்தி அவர்களிடம் தாக்கல் செய்தார். தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பிரதானமாக உள்ள பாலக்கோடு சட்டமன்ற தொகுதி தமிழக உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் இருக்கும் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக பிரதான இரண்டு பெரிய கட்சிகள் இடையே நாம் தமிழர் கட்சிக்கு பொது மக்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாக வேட்பாளர் தெரிவித்தார். மேலும் மாற்றத்தை நோக்கி மக்கள் விரும்புவதாகவும் நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் பொதுமக்கள் என தங்களை இனைத்துக் கொள்ளும் வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிகபடியான வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெரும் என்று தெரிவித்தார்.