முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சத்தியவதி கணேசன் நினைவு பரிசு வழங்கினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சத்தியவதி கணேசன் நினைவு பரிசு வழங்கினார். சேலம் எடப்பாடி தொகுதியில் 7வது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அதன் பின் எடப்பாடி அருகே பெரியசோரகையில் சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து சொந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவரை பெரியசோரகை சத்தியவதி கணேசன் தனது மகள் திவ்யா சுரேஷூடன் சென்று சந்தித்து தானே உருவாக்கிய நினைவு பரிசு வழங்கினார். இந்த நினைவு பரிசில் போஸ்ட் கார்டில் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கொண்டு அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களை உருவாக்கி, அவற்றை ஒன்றாக இணைத்து பிரேம் போட்டு வழங்கினார்.நினைவு பரிசை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் செம்மலை, பொன்னையன், சந்திரசேகரன் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.