பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிக்கப்பட்டார்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்
அதனை தொடர்ந்து இன்று 5வது முறையாக கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்பும்னு தாக்கல் செய்தார். அப்போது தர்மபுரி மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் அனந்த கிருஷ்னன், பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பத்திக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் என தெரிவித்தார்.