ஆற்காடு ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் மஹா அன்னதான விழா.
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு ஶ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் மயானகொள்ளை திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு மஹா அன்னதான விழா ஆற்காடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ரஞ்ஜீத்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக டிரஸ்டின் கௌரவ தலைவர் முத்துவேல் தொழிலதிபர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்து சிறப்பித்தனர். இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பூக்களால் அலங்கரிக்க பட்ட அன்னபூரணி சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யபட்டு பகல் 12 மணிக்கு துவங்கிய அன்னதான நிகழ்ச்சி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அறக்கட்டளை நிர்வாகிகள், அன்னபூரணி டிரஸ்ட் நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஜெய்மாருதி சரவணன், கார்பெண்டர் இளங்கோவன் ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.