கிராம அளவிலான சுகாதார குழு உறுப்பினர்களுக்கு நீர் மேலாண்மை குறித்த பயிற்சி

Loading

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மட்டும் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேர்ந்த பொதுமக்களுக்கு திருவண்ணாமலை ரீடு அறக்கட்டளை சார்பில் .குடிநீர் வடிகால் வாரியத்தின் நிதியுதவியுடன் கிராம சுகாதார குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாக பொறியாளர் மோகன், மற்றும் உதவி பொறியாளர் சுரேஷ்.வழிகாட்டுதலோடு நீர்மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து கிராம அளவிலான குடிநீர் வழங்கும் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் செங்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி செயலாளர் அருணேஷ்வரன், ரீடு நிர்வாக இயக்குநர் ப.கி.ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுநாத்தூர் ஊராட்சி செயலாளர் சரவணன், தலைமை ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியர் ஜெயக்குமார், மற்றும் பயிற்றுநர்கள் ஏற்றம் சக்திவேல், ஜேசுதாஸ், அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு நீர்பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து கையேடுகள் வழங்கப்பட்டது. முடிவில் களப்பணியாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply