திருவள்ளூர் அடுத்த காக்களூரில் 100 சதவிகித வாக்கை உறுதி செய்யும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு : மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் :

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதனையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் புற நோயாளிகளுக்கான அனுமதி சீட்டில் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அச்சிட்டு விநியோகிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மனித சங்கிலியில் கலந்துக் கொண்டு, வண்ண பலுன்களை பறக்கவிட்டு கட்டாயம் 100% வாக்கு பதிவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

இறுதியாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தில் திரையிடப்படும் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் பா.பொன்னையா பார்வையிட்டார்.

நிகழ்ச்சிகளில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ்,சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.அ.முகம்மது ரசூல் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
=======================================================================

0Shares

Leave a Reply