நீலகிரி மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை
![]()
நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முககவசம் அணியாமல் வரும் பொது மக்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கபடும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்திரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் வெளி மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டதிற்கு வருவதாலும், நீலகிரி மாவட்டத்தில் கொரனோ தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டுகொரனோ தொற்று குறைந்து தற்போது அதிரித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.முககவசம் அணியாத பொதுமக்களை பார்வையிட பறக்கும் படைகள் அமைக்கட்டுள்ளன. முககவசம் அணியாத பொதுமக்களுக்கு 6மாதங்கள் சிறை தண்டனை விதிக்கபடும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் உத்திரவிட்டுள்ளார்
