கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் சார்பில் வீரமிக்க முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு அழைப்பு….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள் .
இது குறித்து அவர் கூறுகையில் :- தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர், இளநிலை படை அலுவலர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குனர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதி காவல் நிலையத்திலோ தொடர்பு கொண்டு தங்கள் விருப்ப விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் .தேர்தல் பணியில் ஈடுபடும் முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர், இளநிலை படை அலுவலர்கள் உரிய மரியாதையுடன் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் . பணி முடிந்தவுடன் ஊதியம் வழங்கப்படும் .
தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர், இளநிலை படை அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்…

0Shares

Leave a Reply