Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 12, 2021
சென்னை: சார்வரி வருடம் மாசி 28ஆம் தேதி மார்ச் 12, 2021 வெள்ளிக்கிழமை. சதுர்த்தசி திதி பகல் 03.03 மணிவரை அதன் பின் அமாவாசை திதி. சதயம் நட்சத்திரம் இரவு 10.51 மணிவரை அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம். சுக்கிர பகவான் ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்று ரிஷப ராசியில் செவ்வாய், ராகு, விருச்சிகத்தில் கேது,மகர ராசியில் சனி, குரு, கும்ப ராசியில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இன்றைய தினம் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.
மேஷம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் வாங்கும் யோகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். நான்கு கிரகங்களின் பார்வை ஐந்தாம் வீட்டில் மீது விழுவதால் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் தேடி வரும்.
ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை அளிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மிதுனம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.
சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும்.
கன்னி = சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு தாரளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். சுப செய்திகள் தேடி வரும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
துலாம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று சுபகாரிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். பெரியவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
தனுசு – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.
மகரம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். செய்யும் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் வருமானம் வரும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
கும்பம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்குள் பயணம் செய்கிறார். ராசியில் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இன்று உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 12ஆம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். நிதி நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.