மக்கள் நீதி மையம் கன்னியாகுமரி வேட்பாளர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் அறிவிப்பு….
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மைய வேட்பாளராக திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நாகர்கோவில் அருகே உள்ள தென் தாமரை குளத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மைய வேட்பாளர் பி.டி .செல்வகுமார் கூறுகையில் :- தமிழகத்தில் மக்கள் இலவசங்களுக்காகவும் பிரியாணிக்காகவும் மதுபானத்திற்காகவும் ஏமாந்தது போதும், இனியாவது வாக்காளர்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்காகவும் மக்கள் நீதி மையத்தில் வாக்களிக்க வேண்டும், இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையே மக்கள் நீதி மைய வேட்பாளராக களமிறங்குவதில் எந்த தயக்கமும் எனக்கு இல்லை மிகப்பெரிய அரசியல்வாதிகளான மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி முக்கிய இடத்தை பெற்றாரோ அதே போன்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் முக்கிய இடத்தை பெறுவார். வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்று அவர் கூறினார்…