பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைச்செல்வியை ஆதரித்து சீமான் பிரச்சாரம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளரை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கெண்டார் அப்போது அவர் பேசுகையில்
தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளும் சலுகை, மானியம், இலவசம் கொடுத்து நாட்டை கெடுத்து வைத்திருக்கின்றன.
கேடுகெட்ட பண நாயகம் வீழ்ந்து ஜன நாயகம் வெள்ள ஒரு முறை விவசாய சின்னத்தில் வாக்களியுங்கள்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் ஊழலற்ற ஆட்சி செய்வோம், தற்போது திராவிட ஆட்சியில் கல்வி வியாபார பொருளாக உள்ளது தனியார் கல்வி நிறுவனங்களில் படித்ததால்தான் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற மாயையை மாணவர்களின் மத்தியல் உருவாக்கப்பட்டுள்ளது, அரசு பள்ளிகளின் தரம் குறைவாக உள்ளது,
கனிம வளங்களை இரன்டு திராவிட கட்சிகளும் கொள்ளையடித்து வருகின்றன,ஒரு மனிதன் உயிர் வாழ 420 மரம் தேவை ஆனால் வெறும் 28 மரம் தான் உள்ளது, நாங்கள் கேட்பது வாக்கு அல்ல எதிர்கால தம்பி தங்கைகளின் வாழ்க்கையை கேட்கிறோம், எனவே விவசாய சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றன்.