தேனி மாவட்டம் போடியில் போடி தொகுதி வேட்பாளரான துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனு தாக்கலை…
தேனி மாவட்டம் போடியில் போடி தொகுதி வேட்பாளரான துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனு தாக்கலை போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயா மற்றும் தேர்தல் நடத்தும் துறை அலுவலர் செந்தில் ஆகியோரிடம் உறுதிமொழியை ஏற்று தனது வேட்பு மனுத்தாக்கல் வழங்கினார் வேட்புமனு செய்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் எனவும் போடி தொகுதி மக்களுக்கு 10 ஆண்டுகளில் அனைத்து வசதிகளை செய்து கொடுத்திருப்பதாகவும் கொரானா உள்ளிட்ட அனைத்து பேரிடர் காலங்களிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்திருப்பதாகவும் கூறினார்.மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும் எனவும் கூறினார் போடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் போடி மக்களுக்கு மீண்டும் புதிய பல திட்டங்களை கொண்டு வருவதாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.தேனி பாராளுமன்ற உறுப்பினர் O.P.ரவீந்திரநாத் நகர கழக செயலாளர் V.R.பழனிராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.