குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் மகளிர் தின விழா
![]()
குடியாத்தம்.மார்ச்.10. குடியாத்தம் கே எம் ஜி கல்லூரியில் நேற்று முன்தினம் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் மு.வளர்மதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பேராசிரியர் மேகராஜன், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வினிதா ஜனனி வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக தரவரிசையில் முதல் தரம் பெற்ற மாணவ-மாணவிகள் குத்து விளக்கினை ஏற்றி விழாவைக் துவக்கி வைத்தனர். கல்லூரியின் நிர்வாகிகள் சார்பில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் தரம் பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு செய்யப்பட்டது. கணினி பயன்பாட்டில் தலைவர் பேராசிரியர் தமிழ்த்துறை பேராசிரியர் வளர்மதி பேராசிரியர்கள் சங்கீதா, இராதா, சரளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மகளிர் மன்ற உறுப்பினர் பேராசிரியர் ராமப்பிரியா நன்றி கூறினார்
