Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 09, 2021
சென்னை: சார்வரி வருடம் மாசி 25ஆம் தேதி மார்ச் 09, 2021 செவ்வாய்க்கிழமை. ஏகாதசி திதி பகல் 03.02 மணிவரை அதன் பின் துவாதசி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 08.41 மணிவரை அதன் பின் திருவோணம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை.
மேஷம் – சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் ,இன்றைய தினம் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் இன்றைய தினம் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவு செய்வீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மிதுனம் – சந்திரன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும். கவனம் தேவை.
கடகம் – சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி அதிகரிக்கும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
சிம்மம் – சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
கன்னி – சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு சுபசெய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகள் அதிகமாகும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம் – சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுப காரியங்கள் நடைபெறும். இன்று நீங்கள் வீண் பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.
தனுசு – சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். கணவன் மனைவி இடையே பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். திடீர் பண வரவு அதிகரிக்கும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.
மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசியில் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று உங்களுடைய நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளில் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். சுப காரியங்களில் திடீர் தடைகள் வரும் நிதானம் அவசியம்.
கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பணயம் செய்கிறார். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்களுக்கு வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பண வரவு அதிகரிக்கும்.