திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் அன்பாலயா கிராம மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா
திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில்
அன்பாலயா கிராம மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில்
சர்வதேச மகளிர் தினவிழா
திருவண்ணாமலை மார்ச்: 9
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், அன்பாலயா கிராம மேம்பாட்டு அறக்கட்டளையும், இணைந்து பெண்களுக்கான சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி பெண்களுக்கான சட்டவிழிப்புணர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடத்தியது.
அன்பாலயா கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் இயக்குநர் மதுபாரதிதமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் வே.கபீர்தாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். மங்கலம் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியை சசிகலைகுமாரி, ஆதித்யா ஆர்கானிக்ஸ் ரேவதிசிவக்குமார், சந்தியா அன்பழகன், வழக்கறிஞர் ஆதிபொன்னரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஸ்ரீராம், மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் சார்பு நீதிபதி ராஜ்மோகன், நீதித்துறை நடுவர் விக்னேஷ்பிரபு, திருவண்ணாமலை போக்சோ நீதிபதி வசந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி, உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் சட்டப்பணிகள் ஆணைக்குழு சி.திருமகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பேசுகையில், பெண்களுக்கான குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவிலிருந்து மீட்பது குறித்தும் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.
முடிவில் இ.சிவரஞ்சனி நன்றியுரை ஆற்றினார்.