வீரபாண்டி அருகே கூட்டு வேளாண்மை பற்றி மகளிர் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வீரபாண்டியில் அமைந்துள்ள களஞ்சிய ஜீவிதத்தில் கூட்டு வேளாண்மை பற்றி மகளிர் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் களஞ்சிய ஜீவிதத்தை சார்ந்த மகளிர் நிறுவனர்கள் தலைமையில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். வேளாண் கல்லூரி மாணவி கௌசிகா வரவேற்புரை வழங்கினார். அதில் லோகநாயாகி மற்றும் மதுஸ்ரீ கூட்டு வேளாண்மையின் பயன்களைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து விளக்கம் அளித்தனர். மேலும் விவசாயிகளின் சந்தேகங்களை இலக்கியா மற்றும் ஜெயசுதா நிவர்திசெய்தனர். இறுதியில் இந்துமதி நன்றியுரை கூறினர் . இதில் கூட்டு வேளாண்மை பற்றியும் மகளிர் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர்