மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் முஸ்லீம் அமைப்பு சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.
தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் முஸ்லீம் அமைப்புகளான,நாகூர் தர்கா டிரஸ்டி திரு. செய்யது யூசுப் சாஹிப் காதிரி, அகில இந்திய சுன்னத்துல் ஜமாத் திரு. சுல்தான் கலிபா காதிரி, சாஹிப்பர் மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த திரு. ஜான் செய்யது மீரான் சாஹிப் காதிரி,நவாப் வாலாஜா பள்ளி கூட்டமைப்பு முத்தவல்லி ஹாஜா நஜ்முதீன் முகலி, தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் திரு. செய்யது முஹம்மது கலிபா சாஹிப், னூரே ஜமாலியா கூட்டமைப்பு னவாஜ் முஹம்மது ஹக், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் திரு. செய்யது மீரான், ஹஸ்வத் நீலம் பாஷா தர்கா மற்றும் பள்ளிவாசல் டாக்டர் குலாப் அலிஷா முத்தவல்லி, முஸ்லிம் சாரிட்டபிள் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் திரு. பி. அன்வர் பாஷா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த 50 பேர் நேரில் சந்தித்து,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.அதற்கு, கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான திரு.மாஃபா. பாண்டியராஜன் அவர்களும் உடன் இருந்தார்.