இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்!

Loading

இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் ‘பே-பெர்-வியு ஓ.டி.டி.’ தளம் மார்ச் 5 அன்று தொடக்கம்!
தியேட்டர்களில் உள்ளது போன்று, இனி விரும்பிய திரைப்படங்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்க்கலாம்!
சந்தாதாரராக வேண்டிய அவசியம் இல்லை; ஒரு படம் பார்ப்பதற்கான டிக்கெட் விலை ரூ. 20 -லிருந்து ஆரம்பமாகிறது!
தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களை தற்போது காணலாம்!
திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்த முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் படைப்பாளிகள் வெளியிடலாம்!

ஆன்வி.மூவி’ எனும், புதிய ஓ.டி.டி. தளத்தை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அதன் இயக்குனரான திருமதி ஜெயந்தி தேவராஜன், “இந்தியாவில் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இணையத் தொடர்கள், பிற வகை காட்சித் தொகுப்புகளை வெளியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் படைப்பாளிகளின் விருப்பத் தேர்வாக எங்களது தளம் விரைவில் மாறும். கட்டணம் செலுத்தி திரைப்படங்களைக் கேட்டுப் பெறும் வாய்ப்பு கொண்ட இந்தியாவின் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ தளம் எங்களது ‘ஆன்வி.மூவி’தான். முதல் 3 மாதங்களிலேயே, மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் எங்களது டிஜிட்டல் திரையரங்கில் திரைப்படங்களைக் கண்டு களிப்பார்கள். அடுத்த 6 மாதங்களுக்கு மாதந்தோறும் தொடர்ந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கிறோம்.

எங்கள் தளத்தை ‘உங்களது பிரைவேட் டிஜிட்டல் திரையரங்க வளாகம்’ என்றே நாங்கள் குறிப்பிடுகிறோம். டிஜிட்டல் வசதி கொண்ட திரையரங்கத்துக்குச் சென்று படம் பார்க்கும் அனுபவத்தை, எங்களது தளத்தின் வழியாக திரைப்படத்தைக் காணும் நேயரும் பெற வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில், பல திரையரங்குகளைக் கொண்ட வளாகத்தில், திரைப்பட போஸ்டர்களைப் பார்த்து, படத்தைத் தேர்வு செய்வது போல, எங்களது தளத்திலும் என்னென்ன திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், அதில் ஒன்றைத் தேர்வு செய்து பணம் செலுத்தி திரைப்படத்தைக் கண்டு களிக்கும் வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்து” என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *