இயற்கை வழி வேளாண்மை பற்றி விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் பயிற்சி
![]()
இயற்கை வழி வேளாண்மை பற்றி விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் பயிற்சி
சேலம் மாவட்டம் , தலைவாசல் வட்டாரம், வீரகனூர் கிராமத்தில் திரு. சண்முகம் அவர்களின் தோட்டத்தில், சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை வழி வேளாண்மை பற்றி தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவிகள் இலக்கியா, இந்துமதி, ஜெயசுதா, கௌசிகா, லோகநாயகி, மதுஸ்ரீ ஆகியோர் ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் போன்ற இயற்கை உரங்களை செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காட்டினர். மேலும் அவற்றின் நன்மைகளை பற்றியும் எடுத்துரைத்தனர்.
