கேட்டலிஸ்ட் பி.ஆர். நிறுவனத்திற்கு, பி.ஆர்.எஸ்.ஐ. அமைப்பின் தேசிய விருது! மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் வழங்கினார்!
கேட்டலிஸ்ட் பி.ஆர். நிறுவனத்திற்கு, பி.ஆர்.எஸ்.ஐ. அமைப்பின் தேசிய விருது! மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் வழங்கினார்!
சென்னையைச் சேர்ந்த முன்னணி பி.ஆர். ஏஜென்சியாகிய கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் செய்தி பரப்பும் நிறுவனத்திற்கு, பப்ளிக் ரிலேஷன்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய விருதினை, மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர். ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வழங்கினார்.
அண்மையில் இணைய வழியில் நடைபெற்ற பி.ஆர்.எஸ்.ஐ.-யின் 42-ஆவது ஆண்டு மாநாட்டில், மக்கள் தொடர்புத் துறையில் 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சென்னையில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகளுக்கு தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் பொங்கல் விழா நிகழ்ச்சிகளை தத்ரூபமாக நடத்தியமைக்காக இந்த விருது கேட்டலிஸ்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநர் திருமதி. பேபி ராணி மவுரியா பி.ஆர்.எஸ்.ஐ. அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர். அஜித் பாதக் ஆகியோரின் முன்னிலையில், இவ்விருதினை, கேட்டலிஸ்ட் பி.ஆர். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு. இராம்குமார் சிங்காரம் பெற்றுக் கொண்டார்.
2020-ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.எஸ்.ஐ. தேசிய விருதுகளுக்காக 36 வகைப்பாடுகளில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் அரசுத் துறை நிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும், தனியார் மக்கள் தொடர்பு நிறுவனங்களும் தாங்கள் செய்து முடித்த சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பிராஜெக்ட்களை விருதுகளுக்காகத் தாக்கல் செய்திருந்தன.
பல்வேறு நடுவர்களைக் கொண்டு பலகட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளுக்குப் பிறகு, இறுதியாக 100 திட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 3 விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கிடைத்தன. அதில் ஒன்று, கேட்டலிஸ்ட் பி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.