குழந்தை வரம் தரும் போர்மன்ன லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் போத்துராஜாமங்கலம் என்றழைக்கப்படும் மங்கலம் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க போர் மன்ன லிங்கேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 189-வது ஆண்டு திருத்தேர் திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. 27- ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாலமுருகன் பல்லக்கு ஊர்வலம் ,8மணிக்கு நாட்டுப்புற பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
28-ஆம் தேதி இரவு 7 மணிக்கு பராசக்தி ஊர்வலம், இரவு 8மணிக்கு நகைச்சுவை பாட்டு மன்றம் நடந்தது.
மற்றும் (மார்ச் 1-ஆம் தேதி )மாலை 6மணிக்கு பரிவார தேவதைகள் ஊர்வலம் ,இரவு 10 மணிக்கு பக்தி நாடகம், 12 மணிக்கு வாணவேடிக்கை ,
கரகாட்டம்,
12.30 மணிக்கு மகா கும்பம் எடுத்து வருதல் ,சுவாமி அருள் வாக்கு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அப்போது அவர்கள் பொங்கலிட்டு அதனுடன் குழம்பு சேர்த்து எடுத்து வந்து சுவாமிக்கு படையலிட்டனர்.இந்த படையல் சோறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது .அதனை பெற்று சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது .இதன்காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் படையல் சோறு வாங்கி சாப்பிட்டனர்.
விழாவை முன்னிட்டு
நேற்று(2-ந்தேதி)
காலை 5 மணிக்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.பின்னர் போர்மன்னலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சென்றனர். நேற்றுஇரவு வரை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு
அங்கு 50-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது .
அங்கு கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.