Today’s Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – மார்ச் 1, 2021
சென்னை: சார்வரி வருடம் மாசி 17 ஆம் தேதி மார்ச் 1, 2021 திங்கட்க்கிழமை. துவிதியை திதி காலை 08.36 மணி வரை அதன் பின் திருதியை திதி மறுநாள் விடிகாலை 05.46 மணிவரை. உத்திரம் நட்சத்திரம் காலை 07.37 மணி வரை அதன் பின்னர் ஹஸ்தம் விடிகாலை 05.31 மணிவரை உள்ளது அதன் பின் சித்திரை நட்சத்திரம். சந்திரன் சஞ்சாரம் கன்னி ராசியில் உள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களில் தடை வரும் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவு அதிகரிக்கும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். இன்று குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மன சங்கடங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.
மிதுனம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை மாறும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகவே கிடைக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
கடகம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குரு பார்வையால் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க இன்றைக்கு நல்ல நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை ஓரளவு குறையும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. மன நிம்மதி உண்டாகும்.
கன்னி:
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
துலாம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உற்றார் உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத உதவி தேடி வரும். வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
விருச்சிகம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாக 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் தேடி வரும். கடன் பிரச்சினை குறையும்.
தனுசு:
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் குழந்தைகள் மூலம் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். புதிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். கடனாகக் கொடுத்த பணம் தடையின்றி வசூலாகும்.
மகரம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை மாறும் பண வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம்.
மீனம்:
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்வீப்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.