திருவண்ணாமலையில் சட்டபாதுகாப்பு -சமூகநீதி கேட்டு மருத்துவ சமுதாய மக்கள் ஆர்ப்பாட்டம்……
தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். செய்யாறு மதி. மாவட்டச் செயலாளர் ரமேஷ். சித்த மருத்துவர் சங்க மாநிலத் துணை அமைப்பாளர் மோகன், மாவட்ட பொருளாளர் பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்.பி.சி .பிரிவில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.பி.சி.ஆர் .சட்டப்பாதுகாப்பு மற்றும் சமத்துவ சமூக நீதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
இதுபற்றி மாவட்டத் தலைவர் செந்தில் கூறும்போது,எங்கள் மருத்துவ சமூக மக்கள் கல்வியில் வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தில் எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை.
எம் பி சி பிரிவில் எந்த சலுகையையும் எங்கள் சமூக மக்கள் பெற முடிவதில்லை.
ஏழ்மை நிலையில் உள்ள மருத்துவ சமூக மக்கள் வளர்ச்சிக்காக 30 ஆண்டுகளாக போராடிக்கொண்டு இருக்கிறோம்.
பி.சி.ஆர் சட்ட பாதுகாப்பு வழங்க அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3லட்சம் சலூன் கடைகள் அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.