கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது..

Loading

கும்பகோணம் பிப் 23

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி அரசு மாதாந்திர உதவித்தொகை 3000 தெலுங்கானா அரசு 3016 வழங்கி வருகிறது அதேபோல் தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை 3000 வழங்க வேண்டும் கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் அரசு துறையிலும் தனியார் துறையிலும் 5 சதவீத மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 படி வேலைவாய்ப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது

போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட துணை தலைவர் சுகுமார் தலைமை வகித்தார் பாபநாசம் கணேசன் திருப்பனந்தாள் பாரதி கும்பகோணம் செந்தில்குமார் தமிழரசன் திருவிடைமருதூர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் போராட்டத்தில் திருவிடைமருதூர் திருப்பனந்தாள் கும்பகோணம் ஒன்றியங்களில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பாய் படுக்கை சமைத்து சாப்பிட தளவாட பொருட்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை குடியேறி போராட்டம் செய்தனர் ஆனால் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் மாற்றுத்திறனாளிகள் என்று கூட பார்க்காமல் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *