மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்‌ நதிகள்‌ இணைப்புத்‌ திட்டத்திற்கான பூமி பூஜை செய்து பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்‌ பொதுப்பணித்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ நீர்வள ஆதாரத்‌ துறை சார்பில்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, விராலிமலை
வட்டம்‌, குன்னத்தூர்‌ ஊராட்சியில்‌ காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள்‌ இணைப்புத்‌ திட்டத்திற்கான பூமி பூஜை செய்து பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்‌.
உடன்‌, மாண்புமிகு துணை முதலமைச்சர்‌ திரு.ஒ. பன்னீர்செல்வம்‌, மாண்புமிகு கைத்தறி மற்றும்‌ துணிநூல்துறை அமைச்சர்‌ திரு.ஒ.எஸ்‌.மணியன்‌, மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வு மற்றும்‌ குடும்ப நலத்துறை
அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌, மாண்புமிகு சுற்றுலாத்‌ துறை அமைச்சர்‌ திரு. வெல்லமண்டி என்‌. நடராஜன்‌, மாண்புமிகு பால்வளத்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாண்புமிகு கதர்‌ மற்றும்‌
கிராமத்‌ தொழில்கள்‌ துறை அமைச்சர்‌ திரு ஜி. பாஸ்கரன்‌, மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்‌ துறை அமைச்சர்‌ திருமதி எஸ்‌.வளர்மதி, நாடாளுமன்ற மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌,
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின்‌ தலைவர்‌ திரு.பி.கே. வைரமுத்து, பொதுப்பணித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ ௧. மணிவாசன்‌, இ.ஆ.ப., புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி பி. உமா
மகேஸ்வரி, மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply