புதுப்பூங்குளத்தில் முப்பெரும் துவக்க விழா

Loading

வாணியம்பாடி :- திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர் தாலுக்கா, AK.மோட்டூரை அடுத்த புதுப்பூங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் இல்லம், சிட்டுகள் மையம், அறிவியல் இயக்கக் கிளை ஆகிய முப்பெரும் துவக்க விழா நடைபெற்றது. திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் செண்பகவல்லி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு புதுப்பூங்குளம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் புண்ணியமூர்த்தி வரவேற்புரையும், புதுப்பூங்குளம் கிளைச் செயலாளர் வேலு நன்றியுரையும் கூறினர். மாவட்ட செயலாளர் குணசேகரன் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். முன்னதாக முப்பெரும் துவக்க விழாவினை மாவட்ட பொருளாளர் ஜெயசுதா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். மாவட்டத் தலைவர் அச்சுதன், வாணியம்பாடி கோட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, திருப்பத்தூர் கோட்டத் தலைவர் துரைமணி, துணைச்செயலாளர் கோவிந்தராஜன், தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆரோக்கியராஜ், திருமா பயிலக ஒருங்கிணைப்பாளர் திருமாவிமல் உள்ளிட்டவர்கள் வாழ்த்திப் பேசினர். ஆம்பூர் கோட்ட தலைவர் கலீல், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, நகர செயலாளர் ஸ்ரீதரன், ஒன்றிய துணைத்தலைவர் கோவிந்தசாமி, செல்வராணி, துணைச்செயலாளர் டாலிமெர்ஸி, சின்ன வெங்காயப் பள்ளி சிட்டுகள் மைய தன்னார்வலர் செண்பகம், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். புதுப்பூங்குளம் அறிவியல் கிளையின் தலைவர், செயலர், பொருளாளராக முறையே ஜெகதீசன், வேலு, வில்லன்பிரபு ஆகியோரும், துணைத் தலைவர்களாக வசந்தி, மணிமேகலை, துணைச் செயலாளர்களாக சத்யராஜ், ராஜசேகர் ஆகியோரும், புதுப்பூங்குளம் சிட்டுகள் மைய தன்னார்வலராக ராஜேஸ்வரியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக கலைத்தாய் கலைக்குழுவின் பறையிசை, ஒயிலாட்டம், கரகாட்டம், அறிவியல் பாடல்கள் என குதூகலமான கலைநிகழ்ச்சிகள் தொடக்கம் முதல் இறுதிவரை இடையிடையே நிகழ்ந்தன. கலைநிகழ்ச்சிகளை கலைச்செம்மல் சாமு ஒருங்கிணைத்தார். சிறகுகள் அறக்கட்டளையின் ராமு, முருகன், தாஸ் ஆகியோர் சிட்டுகள் மைய குழந்தைகளுக்கு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களைப் பரிசாக வழங்கினார். கோட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜன் துளிர் இல்லக் குழந்தைகளுக்கு துளிர் சிறப்பு இதழ் தொகுப்பைப் பரிசளித்தார். தூய நெஞ்சக் கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுகளை நடத்தி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்ப் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கோட்டச்செயலாளர் மாணிக்கமுனிராஜ் தொகுத்து வழங்கினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *