Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் – February 19, 2021
சென்னை: சார்வரி வருடம் மாசி 07ஆம் தேதி பிப்ரவரி 19, 2021 வெள்ளிக்கிழமை. சப்தமி திதி நாள் பகல் 10.58 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி. கார்த்திகை நட்சத்திரம் விடிகாலை 05.57 மணி வரை அதன் பின் ரோகிணி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருக்கவும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
இன்று ரத சப்தமி. சூரியனை வழிபட நன்மைகள் நடைபெறும்.
மேஷம்:
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும் பண வருமானம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வேலையில் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உதவி செய்வார்கள்.
ரிஷபம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.
மிதுனம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடன் வேலை செய்பவர்களால் சில பிரச்சினைகள் வரலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படக்கூடும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
கடகம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.
கன்னி:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கடினமான காரியங்களையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.
துலாம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிடங்களிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடவும். இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.
விருச்சிகம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைத்துள்ளது. இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
தனுசு:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்:
சந்திரன் இன்றைய தினம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
கும்பம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் பணவரவு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும்.
மீனம்:
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பண வரவு அதிகரிப்பால் கடன் பிரச்சினை குறையும்.