Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் February 17, 2021
சென்னை: சார்வரி வருடம் மாசி 5ஆம் தேதி பிப்ரவரி 17, 2021 புதன்கிழமை. சஷ்டி திதி நாள் முழுவதும். அசுவினி நட்சத்திரம் இரவு 11.48 மணி வரை அதன் பின் பரணி நட்சத்திரம். புதன் பகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் சந்திரன் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம் – சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். உங்க ராசியில் உள்ள செவ்வாயுடன் சந்திரன் இணைந்து சந்திரமங்கல யோகம் கூடி வந்துள்ளது. இன்றைக்கு மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். ஆன்மீக பயணங்கள் மன அமைதியை தரும். உங்களின் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இன்றைக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.
ரிஷபம் – சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு வந்தாலும் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.
மிதுனம் – சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தை வெற்றி பெறும். வியாபாரத்தில் லாபம் வரும் வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை மேலோங்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பேச்சில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை தரும்.
கடகம் – சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல தகவல் தேடி வரும். பழைய கடன்கள் வசூலாகும். வெளியிலிருந்து வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உற்சாகமான நாளாக அமையும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.
சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணவரவு வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க உழைப்பை முதலீடு செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கன்னி – சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமாக இருக்கவும். வீட்டில் சில சங்கடமான சம்பவங்கள் நடைபெறும் என்பதால் மன உளைச்சல் அதிகமாகும். இன்றைக்கு தேவையில்லாத டென்சன் வரும் என்பதால் புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்றைக்கு மவுன விரதம் இருப்பது நல்லது.
துலாம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைக்கு குதூகலமான நாள். உங்களுக்கு பணவரவு வரும். சின்னச் சின்ன மன அழுத்தங்கள் இருந்தாலும் தேடி வரும் நல்ல செய்தியால் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். காதலில் வெற்றி உண்டாகும். சந்திரன், செவ்வாய் நேரடி பார்வையால் சுப காரியத்தில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம் – சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் ராசிநாதன் செவ்வாயுடன் சஞ்சரிக்கிறார். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பணத்தை சிக்கனமாக செலவு செய்து எதிர்காலத்திற்கு சேமியுங்கள். இன்று உற்சாகமான நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். ஆலய வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும்.
தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தன்னம்பிக்கையும் உற்சாகமும் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு நன்றாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் பல புதிய மாற்றங்களை செய்வீர்கள். இன்றைய தினம் சந்தோஷமான நாளாக அமையப்போகிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
மகரம் – சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனமாக பேசவும். இல்லாவிட்டால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். எந்த பிரச்சினைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்க குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பம் குதூகலமாக இருக்கும். காதல் வாழ்க்கை களைகட்டும். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்களுடன் ஏற்படும் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
மீனம் – சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டியிருக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.