ரூபாய் 1.5 கோடி மதிப்புள்ள இடத்தை போலியான ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த இருவர் கைது .
ரூபாய் 1.5 கோடி மதிப்புள்ள இடத்தை போலியான ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம்
செய்து அபகரித்த இருவர் கைது .
புகார்தாரர் திரு.சுப்பிரமணியன், த/பெ.முத்தையாபிள்ளை, எண், 9 PSG Tam
flats, எண். 33 தெற்கு மாடவீதி திருநகர் காலளி, சென்னை-15 என்பவர் காவல்
ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுவில் கடந்த 29.06.1973 அன்று
திரு,கணபதி சின்டிகேட் என்னும் கம்பெனியின் பங்குதாரரும் பவர் பெற்றவருமான
எஸ்.விஜயகுமார் இடமிருந்து சோலிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 731 பிளாட்
எண்.2171ல் 3480 சதுரடி கொண்ட காலி நிலத்தை தான்கிரையம் பெற்று தன்
பெயரில் கணிணி பட்டாவும் பெற்றுள்ளதாகவும் தான் மேற்படி இடத்தை விற்பனை
செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கசான்று மற்றும் ஆவணத்தை பெற்று
பார்வையிட்டதில் தான் கிரையம் பெற்ற இடத்தை தன்னை போல ஆள்மாறாட்டம்
செய்து ரகுராமன் என்பவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவு செய்துள்ளனர்
அந்த பொது அதிகார பத்தரத்தை பெற்ற ரகுராமன் சந்தோஷ்கோபால் என்பவருக்கு
விற்பனை செய்து தங்கள் இடத்தை அபகரித்துள்ளன்ர் மீது நடவடிக்கை எடுக்குமாறு
கொடுத்த புகார் மீது மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரனை
மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் இடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன் என்பவரை போல்
ஆள்மாறாட்டம் செய்து பொது அதிகாரம் பெற்ற ரகுராமன் மற்றும் அந்த
ஆவனத்தில் சாட்சி கையொப்பமிட்ட விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது
செய்து (15.02.2021) நிலமோசடி தடுப்பு நீதிமன்றம் அல்லிகுளத்தில்
ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சென்னை மாநகரில் சொத்து வாங்கும் நபர்கள், போலி ஆவணம் மூலம் ஏமாந்து
நிலத்தை வாங்குவதை தவிர்க்க நிலத்தின் அசல் ஆவணங்களை சரிபாராத்தும்
நிலங்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றி விசாரணை செய்தும் நிலத்தை
பதிவு செய்யும்படியும் பொருள் இழப்பை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது.
———- Forwarded message ———