திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்…
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் சமூகநலத் துறை மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பெண்களுக்கு ரூ.20.39 கோடி செலவில் திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
திரு. சேவூர் எஸ். இராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திரு. தூசி கே. மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் திரு. கந்தன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.