தேயிலை கிரின் டீ தயாரிப்பு.
தேயிலை கிரின் டீ தயாரிப்பு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரம் தோட்டகலை மற்றும் மலைபயிர்களின் துறையின் கீழ் செயல்படுத்தபட்டு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (அட்மா) மூலம் விவசாயிகளுக்கு 08-02-2021 அன்று உள் மாவட்ட அளவிலான omவிவசாயிகள் பயிற்சியானது சின்னபிக்கெட்டி கிராமத்தில் முனைவர் திருமதி. பா.பெபிதா அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது. மேற்கண்ட பயிற்சியில் முனைவர் திருமதி.பா.பெபிதா தோட்டகலை உதவி இயக்குநர் அவர்கள் துறையின் மூலம் வழங்கபடும் மானியதிட்டங்கள் குறித்து விளக்கினார்கள். மேலும் விவசாயிகளே தேயிலை தூள் தயாரிப்புகளில் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக விலை பெற முடியும் என்ற கருத்தினை விளக்கினார்கள். பயிற்சி மற்றும் முன்னோடி விவசாயிகளை திரு.டி.நெல்சன் அவர்கள் தரமான தேயிலை கொழுந்துகளில் இருந்து கிரின்டீ பிளாக்டீ மற்றும் சில்வர் டிப்ஸ் தயாரிப்பு முறைகளை செய்து காட்டினார். இந்த தயாரிப்பினால் மனிதர்களுக்கு உடல் நலத்தில் ஏற்படும் மருத்துவ பயன்பட்டை குறித்து விளக்கினார். மேற்கண்ட தயாரிப்புகளுடன் மூலிகை பயிர்களான ரோஸ்மேரி தைலம் போன்ற மூலிகைகளை கலந்து மூலிகை டீ தயாரிப்பு முறைகளையும் விளக்கினார். தற்போது பசுந்தேயிலைக்கு போதுமான விலை இல்லாத சூழ்நிலையில் மேற்கண்ட பசுந்தேயிலை தயாரிப்புகளை விவசாயிகளே சொந்தமாக வீட்டில் இருந்து கொண்டே தயாரித்து தங்களது உபயோகதிற்கு போக உபரியினை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தினை பெற முடியும் என்பதினை விளக்கினார்.
மேற்கண்ட பயிற்சி விரிவாக்க சீரமைப்பு திட்டத்தை சார்ந்த திரு.ராக்கேஷ் வட்டார தொழில் நுட்ப மேலாண்மை மற்றும் திரு.ஜான்போஸ்கோ உதவி தொழில் நுட்ப மேலாளர் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நன்றியுரை வழங்கினார்கள். மேற்கண்ட பயிற்சியில் சின்னபிக்கெட்டி கிராமத்தினை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.