திருவண்ணாமலை அருகே தென்னை நார் பொருட்கள் உற்பத்தி விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்…
மத்திய அரசின் கயர் வாரியம் சார்பில் திருவண்ணாமலையை அடுத்த சீலப்பந்தல் கிராமத்தில் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி செய்து வருமானம் பெறுவது குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுயதொழில் பயிற்சி ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சுந்தரவதனம், மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி உதவி இயக்குனர் சிவநடராஜன், கயர் வாரிய அலுவலர்
பூபாலன்,சாய்ஜோதி தொண்டு நிறுவனம் வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தென்னை நார் பொருட்கள் உற்பத்தி செய்வது எப்படி?என்பது குறித்தும்,அவைகளை உற்பத்தி செய்ய அரசு மானியத்துடன் வங்கி கடன் பெறுவது குறித்தும் விளங்கினர்.
ஒரு தேங்காய் மட்டை நாரில் மிதியடி மற்றும் பொருட்கள் செய்வதன் மூலம் அது ரூ.40 வரை மதிப்புடையதாகிறது.
அதனை எரித்து வீணாக்காதீர்கள் என்றும்,.தென்னைநார் பொருட்கள் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு ஆண்டுக்கு பலகோடி அன்னிய செலாவணி கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.ஆலோசனை கூட்டத்தில் பயிற்சியில் பங்கேற்று சுயதொழில் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கருணா பாலசுந்தரம்,
சக்தி அறக்கட்டளை சக்திவேல், காமராஜர் அறக்கட்டளை ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.