தலைவாசல் அருகே அம்மா மினி கிளிப் திட்டத்தை தொடங்கினார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட பெரியேரி ஊராட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மகத்தான திட்டமான அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தினை பெரியேரி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சாமானிய மக்களும் தங்களுடைய கிராமத்தில் எளிய முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமென அம்மா மினி கிளினிக் என்ற உன்னதமான திட்டத்தினை பெரியேரியில்
மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.ஆர்.இளங்கோவன் அவர்கள் திறந்து வைத்தார்கள். மேலும் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா 40க்கும் மேற்பட்டோர் பயனாளிகளுக்கு வழங்கினார் ஆடு வளர்ப்பு திட்டத்தின் சுமார் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினர். இதில் கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் மருதமுத்து அவர்கள் தலைவாசல் ஒன்றிய குழு தலைவரும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான ராமசாமி அவர்கள், தலைவாசல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகர் அவர்கள் ,மாவட்ட பொருளாளர் மாவட்ட ஆவின் துணைத் தலைவருமான ஜெகதீசன் அவர்கள், மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் சேகர் அவர்கள், துணைத் தலைவர் பிரவீன் அவர்கள், ஒன்றிய கவுன்சிலர் திலகம் சந்திரசேகர் அவர்கள், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜெகதீசன் அவர்கள், இணை செயலாளர் பாலுசாமி அவர்கள் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் (வடக்கு) அவர்கள் அருள் (தெற்கு) அவர்கள் மாவட்ட துணை செயலாளர் தியாகராஜன் அவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மருத்துவர்கள் மருத்துவ குழுவினர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.