கோவை குப்பே பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார் சட்ட பேரவை தலைவர் தனபால் ..
கோவை குப்பே பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார் சட்ட பேரவை தலைவர் தனபால்
கோவை அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குப்பே பாளையத்தில் முதலமைச்சரின் மக்கள் உயிர்காக்கும் திட்டங்களில் ஒன்றான அம்மா மினி கிளினிக்கை தமிழக சட்டபேரவை தலைவர் மற்றும் அவினாசி சட்டமன்ற உறுப்பினர் தனபால் திறந்து வைத்தார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழக அரசு 2000 மினி கிளினிக்குகளை திறந்துள்ளது . ஏழை எளிய மக்களின் நலன் கருதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிறப்பான ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார்.
அதுபோல அவிநாசி பகுதியில் நீண்ட கால கோரிக்கையான அத்திகடவு- அவிநாசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியானது மிக விரைவாக நடந்து கொண்டு வருகிறது .
மக்கள் நலனில் அக்கறை கொண்டு அனைத்து தேவைகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
சிறப்பான சாலை வசதிகள் , சமுதாய கூடங்கள் , அரசு அலுவலகங்கள் ,மருத்துவ வசதிகள் குடிநீர் வசதிகள் என அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்து தந்துள்ளோம். என்றார்.
உடன் அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் ,வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிச்சாமி ,உட்பட அரசு அதிகாரிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.