தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் சென்னை அடையாறில் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் சென்னை அடையாறில் நடைபெற்றது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பத்மநாபன்
எங்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைப்பெற்றது இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
என்றும் ,இதுவரை சங்கமாக இருந்த தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர , தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற இயக்கமாக மாற்றப்படுகிறது என்றும் நாதஸ்வ மற்றும் தவில் கலைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்
தமிழக அரசு அரசு பேருந்துகளில் நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்க வேண்டும்
தமிழக அரசு இசை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு மட்டும் இசை ஆசிரியர் வேலை அளிக்கப்படுகிறது இதை மாற்றி நாதஸ்வர இசையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தேவஸ்தான திருக்கோயில்களில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களுக்கு அரசு பணி நியமிப்பது போல தமிழ்நாட்டில் உள்ள அனை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் திருக்கோயில்களில் நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு பணியில் அமர்த்த வேண்டும்
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்…
மேலும் எங்களது சங்கத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
.