சென்னை கோயம்பேட்டில் பாஜக மாநில தேர்தல் அலுவலகம் திறப்பு வாக்குகளுக்காக திமுக இரட்டை வேடம் போடுகிறது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு…
சென்னை கோயம்பேட்டில் பாஜக மாநில தேர்தல் அலுவலகம் திறப்பு வாக்குகளுக்காக திமுக இரட்டை வேடம் போடுகிறது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றச்சாட்டு
சென்னை கோயம்பேட்டில் பாஜக மாநில தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சிடி ரவி தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கரூர் நாகராஜன் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பாஜகவின் முன்னணித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன்,
அனைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக என்னுடைய தேர்தல் பிரச்சாரம் இன்று முதல் தொடங்க உள்ளதாகவும் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலகம் திறக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை ஒரே கட்டமாகத்தான் தேர்தல் நடந்துள்ளது என்றும் அதைத் தான் பாஜகவும் வலியுறுத்தி உள்ளது என்றும் ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் மே மாத வெயில் அதிகமாகிவிடும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் மூத்த தலைவர்கள் அமர்ந்து பேசி அதனை முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தார்.
கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கியது திமுக தான் என்றும் அச்சம்பவத்தை இதுவரை கண்டிக்காமல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை ஆதரித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.வெற்றி வேல் யாத்திரை நடக்க கூடாது என்று யார் யாரெல்லாம் புகார் அளித்தார்களோ அவர்களே இன்று வேலை தூக்கியுள்ளனர், இதுதான் வேல் யாத்திரையின் வெற்றி என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் திருத்தணியில் ஸ்டாலின் வேலை பரிசாக வாங்கிக் கொண்டு மற்றொரு நிகழ்வில் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி வேலை வாங்க மறுத்து உள்ளார் இது திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என்றும் இது வாக்குக்காக மட்டும் தான் என்றும் விமர்சித்தார்.
சசிகலாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து அவர் அறிவித்த பிறகே அவர் பற்றிய கருத்துக்களை கூற இயலும் என்றும் கூறியுள்ளார்.
Attachments area