சென்னை அண்ணா நகரில் உள்ள சி.பி எஸ் குளோபல் பள்ளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சாகேத் எஸ் , ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிற்கான மிக விரைவான நேரத்தில் 100 ரூபிக் கனசதுர புதிருக்கு ஒரு கையால் தீர்வு கண்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள சி.பி எஸ் குளோபல் பள்ளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சாகேத் எஸ் , ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிற்கான மிக விரைவான நேரத்தில் 100 ரூபிக் கனசதுர புதிருக்கு ஒரு கையால் தீர்வு கண்டு புதிய சாதனை படைத்துள்ளார் ரூபிக் கனசதுர புதிருக்கு இரு கைகளால் தீர்வு காண்பதே கடினம் என்ற நிலையில் இந்த இளம் வயதில் ஒரே கையை கொண்டு தீர்வு காண சுமார் ஒரு வருடம் பயிற்சி மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார் . 100 ரூபிக் கனசதுர புதிருக்கு ஒரு கையால் தீர்வு காண அவர் எடுத்து கொண்ட நேரம் 56 நிமிடங்கள் ஆகும் சாகேத் கூறுகையில் என் அடுத்த இலக்கு மிக விரைவில் கின்னஸ் சாதனை புரிவதே ஆகும் எனவே அதற்கான முயற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளேன் ஐந்து கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த இளையராம் சேகரின் வழிகாட்டுதலின் கீழ் சாகேத் எஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூபிக் கன சதுர புதிரை தீர்க்கிறார் உலக கியூப் சங்கம் ( WCA ) நடத்திய பல்வேறு போட்டிகளில் சாகேத் எஸ் பங்கேற்றுள்ளார் இவ்வுலகில் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு உதாரணமாக சாகேத் திகழ்கிறார் .