விவசாயிகள் வணிக வங்கிகளில் வாங்கிய பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் பேரியக்க கூட்டத்தில் தீர்மானம் :
விவசாயிகள் வணிக வங்கிகளில் வாங்கிய பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் பேரியக்க கூட்டத்தில் தீர்மானம் :
தஞ்சாவூர் 12- விவசாயிகள் வணிக வங்கிகளில் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என உழவர் பேரியக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் பேரியக்க கலந்தாய்வு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்
அ.சி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பா.ம.க. நகர செயலாளர் முரளிதரன், உழவர் பேரியக்க மாவட்ட துணை செயலாளர் லியத் அலி, வன்னியர் சங்க நகர தலைவர் தமிழரசன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ.ஆலயமணி, மாநில துணைப் பொது செயலாளர் ஜோதிராஜ், தலைமை நிலைய பேச்சாளர் நா.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர்கள் கருணாகரதேவர், சிங்காரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நியூ டவுன், ராயல் டவுன் பகுதிகளில் கழிவுநீர் வடிகால் அமைத்துத் தர பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, தாமதம் ஏற்படும் பட்சத்தில் வருகிற 22-ம் பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, கூட்டுறவு வங்கியை போல விவசாயிகள் வணிக வங்கிகளில் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய மாநில அரசை கேட்டு கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பா.ம.க. நகர தலைவர் காளிதாஸ் நன்றி கூறினார்.