குப்பைகள் இருக்கும் இடங்களை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் உர்பேசர் ஸ்மித் நிறுவனத்தின் “சிட்டிசன் செயலி” யின் பயன்பாட்டினை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், அவர்கள் ரிப்பன் மாளிகையில் துவக்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 9, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட
பகுதிகளில் குப்பைகள் இருக்கும் இடங்களை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால்
சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் உர்பேசர் ஸ்மித்
நிறுவனத்தின் “சிட்டிசன் செயலி” யின் பயன்பாட்டினை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ்,
அவர்கள் ரிப்பன் மாளிகையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்
இணை ஆணையாளர் (சுகாதாரம்) திருமதி எஸ்.திவ்யதர்ஹினி அவர்கள்,
தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு) திரு.என்.மகேசன், உர்பேசர் நிறுவனத்தின் மேலாண்மை
இயக்குநர் திரு.ராவுல் மார்டினஷ், தலைமை செயல் அலுவலர் திரு.மக்மூத் சைத், பொது மேலாளர்
திரு.ஜெய் கிரண் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.