ஆத்தூரில் அதிமுக., இளைஞர் பாசறை கூட்டம்; வருகின்ற 15-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை
சேலம் மாவட்டம், ஆத்தூரில், அதிமுக இளைஞர் பாசறை கருத்தரங்க கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த செல்லியம்பாளையதில் வருகின்ற 15-ந் தேதி(திங்கட்கிழமை) அதிமுக மகளிர் அணி, இளைஞர்-இளம் பெண்கள் பாசறை கருத்தரங்கம், தகவல் தொழில் நுட்பப்பிரிவு, பூத் கமிட்டி கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதற்கான மேடை கருத்தரங்க அரங்கம் அமைப்பதற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்ற உள்ளது. இதற்கான முகூர்த்தகால் நடும் விழாவில், சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர், தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் கா.ராமசாமி, தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், அயோத்தியபட்டினம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.மணி, அயோத்தியாபட்டணம் தெற்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ராஜசேகரன், ஆத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.