சென்னையில் 20-ந்தேதிநடைபெறும் தொடர் முழக்க போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில்முடிவு……….
திருவண்ணாமலை பிப்.8
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலை கார்மேல் பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் மோசஸ்,மாநிலச் செயற்குழு உறுப்பினர்.டேவிட் ராசன். மாவட்டத் தலைவர் முருகன். மாவட்ட செயலாளர். அந்தோணி ராஜ் உள்பட. நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டேவிட் ராசன் பேசும்போது,சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
வருகிற 20-ஆம் தேதி. நடைபெறும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர் முழக்க போராட்டத்தில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கிறார்கள். ஆசிரியர் நலன்,மாணவர் நலன்,கல்வி நலன்,சமூக நலன் உள்ளிட்ட15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் அரசியல் கட்சி தலைவர்கள். தொழிற்சங்க தலைவர்கள், பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அனைத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு போராட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மற்றும்அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பறித்து விட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தொடர் முழக்க போராட்டத்தை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.