இந்திய தேசிய மாணவர் படை தலைமையகத்துக்கு அழைத்து அங்கு நடைபெற்ற விழாவில் மாணவி திவ்யஸ்ரீக்கு சிறந்த சேவைக்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
திருவண்ணாமலை தாமரை நகரில் வசிக்கும் செந்தில் குமார்-ரத்தினம் ஆகியோரின் மகள் திவ்யஸ்ரீ இவர் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். என்.சி.சி.மாணவியான திவ்யஸ்ரீ என்.சி.சி. சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்று ஓவியம் ,நடனம், கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றார். மேலும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.என்.சி.சி.மாணவியான இவரது சேவைபற்றி தெரியவந்ததும் சென்னையில்
செயல்பட்டு வரும் இந்திய தேசிய மாணவர் படை தலைமையகத்துக்கு அழைத்து அங்கு நடைபெற்ற விழாவில் மாணவி திவ்யஸ்ரீக்கு சிறந்த சேவைக்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தான் படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு தலைமைஆசிரியர் ஜெயராஜ் சாமுவேல் மற்றும் மாணவியை வழிநடத்திய விஜய் ஆனந்த் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்தினர்.
மாணவி திவ்யஸ்ரீ தனது வீட்டின் முன்பு தினமும் திருக்குறள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை தகவல் பலகையில் எழுதி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் .. இவரது பன்முகத் திறமையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.