தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டி 8 -பேர் காயம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டி 8 -பேர் காயம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது.
மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். மேலும் விழாவில்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ராமன் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி .தீபா காணிக்கர் அவர்கள், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்ன தம்பி,ஆத்தூர் உதவி கலெக்டர் துரை, ஆத்தூர் வட்டாட்சியர் அன்புச்செழியன் கெங்கவல்லி வட்டாட்சியர் திருமதி. சிவகொழுந்து ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர் அதன் பிறகு வாடிவாசல் சுவாமி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதுஅதன்பிறகு ஒவ்வொரு மாடுகளாக விடப்பட்டு மாடுபிடி வீரர்கள் மாடு பிடித்து அடக்கினர்.700 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் வீரர்கள் லேசான காயம் ஏற்பட்டு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது மாடு முட்டி 8 -பேர் காயம்., இதில் 2 பேர் ஆத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.