லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், வேட்டவலம் லயோலா
கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. சந்திப் நந்தூரி,அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, வேலை
நாடுநர்களுக்கான கையேடு வெளியிட்டு, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலர் செல்வி லோ. யோகலட்சுமி, தாட்கோ மாவட்ட மேலாளர் திரு. ஆர். ஏழுமலை,
முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் திரு. சி. விஜயகுமார், லயோலா
கல்லூரி முதல்வர் முனைவர் வி. பிரிட்டோ, கல்லூரி ஆசிரியாகள் மற்றும் மாணவ,
மாணவிகள் கலந்து கொண்டனர்.