டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன்முறை காலமுறை ஊதியம் மாற்றுப்பணி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள அதிமுக தலைமையிலான அரசு டாஸ்மாக் ஊழியர் நலனில் அக்கறையற்றதாகவே உள்ளது.அரசின் மதுவிலக்கு கொள்கை மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகளால் மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர் களுக்கு முறையான பணி இதுநாள் வரை வழங்கப்படவில்லை.
ஊரடங்கு காலத்திலும் கொரோனா நோய்த்தொற்றுயும் பாராமல் மதுக்கடைகள் திறந்து விற்பனையில் ஈடுபட்டு வரும் ஊழியர்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசுக்கு வேறு வழிகளில் வருவாய் இல்லாத போது டாஸ்மாக் மூலம் தினசரி 120 கோடி ரூபாய் நிதிதருகின்றன