காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் தலைமையில் இன்று (03.02.2021) காலை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், தோழிகளுக்கான பயிற்சி முகாமை குத்துவிளக்கேற்றி, உங்களுக்காக நாங்கள் என்ற சுவரொட்டியை திறந்து வைத்தும் சிறப்பு விருந்தினர்களுக்கு சுவரொட்டிகளை பிரசுரித்தும் விழாப்பேருரையாற்றினார். அவரது உரையில் இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான நகரம் சென்னை என்றும் பாலியல் துன்புறுத்துதல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனைகள் பெற்றுத் தருவது மட்டுமே காவல் துறையினரின் நோக்கம் அல்ல, மனித நேயத்துடன் கூடிய காவல் பணியே சென்னை பெருநகர காவல் துறையின் முக்கிய நோக்கம் என்றும் இதில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலுள்ள தோழிகள் பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் மீது பதிக்கப்படும் சமுதாய முத்திரையை களைந்து அவர்களை எவ்வாறு அணுகுவது? அவர்களுக்கு தைரியம் கொடுப்பது, கல்விக்கான உதவிகளைச் செய்வது மேலும் என்னென்ன தேவைகள் என்பதையறிந்து அனைத்து தேவைகளையும் நிறைவு செய்ய முழுமூச்சுடன் செயல்பட்டு வருவதாகவும் பாலியல் துன்புறுத்தல் என்பது ஒரு விபத்து, “அதை முறியடிப்பதே தோழி திட்டத்தின் முக்கியமான குறிக்கோள்” எனவும் ஒவ்வொருவரும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே Whatsapp காணொலி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு புகார்களை அளித்து பயன்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.