ஆயுஷ் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடலூரில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுஷ் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கடலூரில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலோபதி மருத்துவர்கள் செய்யக்கூடிய அறுவை சிகிச்சையை,ஆயுர்வேத மருத்துவர்களும் செய்வதற்கு அனுமதி அளித்ததை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை ரத்து செய்யவும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோஷங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இந்த உண்ணாவிரத போராட்டம் சுழற்சி முறையில் 14ம் தேதி வரை நடைபெறும் எனவும் மருத்துவர்கள் அறிிவித்துள்ளனர்