தலைவாசல் சுற்றுவட்டார பகுதியில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ குழுவினர் வழங்கினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும் மீண்டும் அனைத்து குழந்தைகளுக்கும் வட்டார மருத்துவ அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்.
இதில் தலைவாசல் சுற்றுவட்டார பகுதியில் மருத்துவ குழுவினர் போலியோ சொட்டு மருந்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் ,அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம், சுங்கச்சாவடி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.